Success in carrying out the commands of Allah

அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவதில் வெற்றி பெறுதல்

It is certain that all the successes of the Hereafter will be on the Prophet Muhammad (pbuh), in order to fulfill the commands of Allah Allaah for the direct benefit of Allah Ta'ala.

அல்லாஹுதஆலாவிடமிருந்துநேரடியாகப் பலன் பெற அல்லாஹுதஆலாவின் கட்டளைகளைமுஹம்மது(ஸல்)அவர்களது வழிமுறைப்படி நிறைவேற்றுவதில் இம்மை , மறுமையின் அனைத்து வெற்றிகளும் உண்டென்பதை உறுதியாக நம்புவது

01.And if Allah and His Messenger decide something, any believing man and woman will have their pleasure.
Not entitled; Anyone who transgresses to Allah and His Messenger has gone astray in public error.
(Al-Ahsab: 36)

இன்னும் , அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால் , நம்பிக்கையாளனான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்வதற்கு 
உரிமையில்லை ; எவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் திட்டமாக பகிரங்கமான வழிகேடாக வழிகெட்டு விட்டார் . 
( அல்அஹ்ஸாப் : 36)

02.And give the command of Allah to any of the messengers
(Except for his being followed by the people - we are not sent.)
(Annisa: 64)

●இன்னும் , தூதர்களில் எவரையும் - அல்லாஹ்வின் கட்டளைக் கொப்ப
( மக்களால் அவர் பின்பற்றப்படுவதற்காகவே தவிர - நாம் அனுப்பி வைக்கவில்லை
( அன்னிஸா : 64 )

03.And you are what our messenger gave you take it he will prevent you from anything get away from it.
(Al-Hashr: 7)

●மேலும் நம் தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதனை நீங்கள்
எடுத்துக் கொள்ளுங்கள்
எதனை விட்டும் உங்களை அவர் தடுத்தாரோ
அதனை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.
(அல்ஹஷ்ர்:7 )

04.And Allah among you
Keep supporting the final day too
In the Messenger of Allah, you have a beautiful example for the one who remembers Allah the most.
(Al-Ahsab 21)

●உங்களில் அல்லாஹ்வையும் 
இறுதி நாளையும் ஆதரவு வைத்து 
அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவராக இருப்பவருக்கு அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் உங்களுக்கு திட்டமாக அழகிய முன்மாதிரி  இருக்கிறது.
( அல்அஹ்ஸாப் 21 ) 

05.So, whoever disobeys His commandment will suffer (in the Hereafter), or (in the Hereafter)
Let them be afraid of the pain that is causing them pain.
(Anun: 63)

●எனவே , எவர்கள் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் ( உலகில் ) தங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை , அல்லது ( மறுமையில் )
நோவினை தரும் வேதனை தங்களுக்கு ஏற்படுவதை பயந்து கொள்ளட்டும் .
( அந்நூர் : 63 ) 

06.Man or woman - he (a) trustee
Whoever does good works (in the world)
We will live as pure life; (At the other end)
Pay them their wages, they did
We will be rewarded with beautiful things.
(Introduction: 97)

●ஆணோ அல்லது பெண்ணோ - அவர் ( ஓரிறை ) நம்பிக்கையாளராக 
இருக்கும் நிலையில் எவரொருவர் நற்செயல் செய்தாலும் , அவரை ( உலகில் ) 
தூய வாழ்வாகத் திண்ணமாக நாம் வாழச் செய்வோம் ; ( மறுமையில் ) 
அவர்களுக்கு அவர்களுடைய கூலியை , அவர்கள் செய்து 
கொண்டிருந்தவற்றில் அழகியதாகத் திண்ணமாக நாம் கூலி வழங்குவோம் . 
( அந்நஹ்ல் : 97 ) 
07.Whoever obeys Allah and His Messenger, He has achieved a great victory. (Al ahsaf: 71)

●எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிகின்றாரோ , திட்டமாக அவர் மகத்தான வெற்றியாக வெற்றியடைந்துவிட்டார். (அல்அஹ்ஸாப்:71)